Categories
மாநில செய்திகள்

திமுகவிற்கு முற்றுப்புள்ளி… களத்தில் இறங்கிய அதிமுக… சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரம்…!!!

தமிழக சட்டமன்றத்தேர்தலில்  திமுக ஊழலை மக்களுக்கு தெரியப்படுத்தி திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என அதிமுக உறுதிமொழி எடுத்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல்6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அதிமுகவினர் வெற்றநடை போடும் தமிழகம் என்று தலைப்பில் தேர்தல் பிரசாரம் செய்து  வந்தனர்.அதன் பிறகு  அதிமுகவினர் “#திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்ற புதிய தோரணையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

அந்த தேர்தல் பிரச்சாரத்தில்,  கடந்த நான்கு ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி செய்த நலத்திட்டங்களையும் கூறினர். மேலும் திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், மின்வெட்டால் மக்கள் பட்ட துன்பங்கள், நில அபகரிப்பு மற்றும்  ரவுடிகளால் பொதுமக்கள் பட்ட கஷ்டங்கள், அத்துமீறல்கள்,ஊழல்கள், அதிகாரம், துஷ்பிரயோகம் போன்றவற்றை புள்ளி விவரத்தோடு மக்களுக்கு தெரியப்படுத்தி  திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று தேர்தல் பிரச்சாரத்தை  தொடங்கிஉள்ளனர்.

Categories

Tech |