Categories
உலக செய்திகள்

“கோலாகலமாக நடந்த உடன்பிறந்த அக்கா- தம்பி திருமணம்”… வினோத காரணம் கூறும் பெற்றோர்… வைரலாகும் வீடியோ…!!

தாய்லாந்தில் 5 வயதே ஆன இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் கோலாகலமாக திருமணம் நடத்தியுள்ளனர்.

தாய்லாந்தில் Weerasak- Rewadee என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இத்தம்பதியருக்கு Washirawit Bee Moosika என்ற ஆண் குழந்தையும் Rinrada Breem என்ற பெண் குழந்தையும் உள்ளது. இரட்டை குழந்தையான இவர்களில் Rinrada Breem தான் முதலில் பிறந்தவள் . இந்நிலையில் நேற்று முன்தினம் Weerasak- Rewadee தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுக்கும்  திருமணம் நடத்தியுள்ளனர். இந்த திருமணத்தில் மாப்பிள்ளை ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. மேளதாளங்கள் முழங்க உறவினர்கள் சீர்வரிசை எடுத்து வந்துள்ளனர்.

இப்படி ஒரு செயலை செய்வதற்கு அந்த தம்பதியினர் ஒரு காரணத்தையும் கூறுகின்றனர். அது என்னவென்றால், புத்த மத நம்பிக்கையின்படி முந்தைய ஜென்மத்தில் காதலர்களாக பிறந்து திருமணம் ஆவதற்கு முன்பே உறவு முறிந்து போனதால் இந்த ஜென்மத்தில் அந்த காதலர்கள் இரட்டையர்களாக பிறப்பார்களாம். எனவே அவர்களை வாழ்க்கையில் ஒன்று சேர்க்க தான் இந்த திருமணம் நடைபெற்றது என்று கூறுகின்றனர்.

அப்படி செய்யாவிட்டால் குழந்தைகளுக்கு ஏதாவது கெட்டது நடந்து விடும். எனவே முந்தைய ஜென்ம காதலர்களை  இந்த ஜென்மத்தில், வாழ்க்கையில் எவ்வளவு சீக்கிரம் சேர்த்து வைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சேர்த்து வைத்தால் குழந்தைகளுக்கு வரக் கூடிய கஷ்டங்கள் நீங்கி விடும். எனவே தான் அக்காவுக்கும் தம்பிக்கும் ஐந்து வயதிலேயே திருமணம் செய்து வைத்தோம் என்று பெற்றோர்கள் இப்படி ஒரு காரணத்தை கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

Categories

Tech |