Categories
தேசிய செய்திகள்

பிளாட்பாரம் டிக்கெட்… ரூபாய் 50 ஆக உயர்வு… கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக… ரயில்வே நிர்வாகம் விளக்கம்..!!

ரயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூபாய் 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மும்பை உள்ளிட்ட சில குறிப்பிட்ட நகரங்களில் ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் ரூபாய் 50 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்படுவது புதிதல்ல. விழாக்காலங்களில் அதிகரிக்கபடுவது வழக்கம் தான். மகாராஷ்டிராவிலும் கொரோனா அதிகரித்து வருகிறது.

மேலும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கட்டண உயர்வு அமல் படுத்தப்பட்டுள்ளது. அதிலும் மும்பை டிவிஷன் உட்பட்ட 78 ரயில்களில் அதிக பயணிகள் வந்து செல்லும் ஏழு நிலையங்களில் மட்டுமே கட்டண உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார் . இது தற்காலிக நடவடிக்கை தான் சமீபத்தில் அவசியமற்ற பயணங்களை மக்கள் குறைக்க வேண்டும் என்பதற்காக இந்த டிக்கெட் கட்டண உயர்வை ரயில்வே நிர்வாகம் அளித்துள்ளது.

Categories

Tech |