மியான்மரில் ராணுவம் சார்ந்து இயங்கும் 5 யூடியூப் சேனல்கள் நீக்கியுள்ளதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மியான்மார் நகரில் கடந்த சில நாட்களாக ராணுவத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறது . அதன்பிறகு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆங்சான் சூச்சி யின் தேசிய கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதாக இருந்து ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி ராணுவத்துக்கும் மியான்மார் அரசுக்கும் மோதல் நீடித்து வந்த நிலையில் ஆங்சான்சூச்சியின் ஆட்சியை களைத்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
மேலும் ராணுவத்தினரால் ஆட்சித் தலைவரையும் அதிபரையும் வீட்டுக்காவலில் ராணுவம் கைது செய்து அதனால் அந்நாட்டில் போராட்டம் தொடங்கிய நிலையில் ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ராணுவத்தினர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் யாங்கூன் நாட்டில் 38 பேர் பலியானதை அடுத்து மேலும் போராட்டம் வலுப்பெற்றது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். இந்த போராட்டத்தினை இராணுவம் யூடியூப் சேனலில் பதிவிட்டு உள்ளது. இதனை கண்டித்து யூடியூப் நிறுவனம் எங்கள் விதிமுறை மற்றும் சட்டங்களுக்கு எதிராக இந்த போராட்டத்தினை வெளியிட்ட ராணுவத்தின் ஐந்து யூடியூப் சேனல்களும் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.