Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டினருக்கு மட்டுமே உரிமை… அடாவடி தனம் செய்யும் சீனா…. பொங்கியெழுந்த பிரிட்டன் ..!!

சீனாவில் ஹாங்காங் நாட்டு தேர்தலுக்கான புதிய திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய நாடாளுமன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஹாங்காங் நாட்டிற்கான தேர்தல் சீர்திருத்தத்திற்கான வரைவு திட்டத்தை நாடாளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய்தது.

இதனால் ஹாங்காங்கில் நடைபெறும் தேர்தலில் சீன நாட்டினர் மட்டுமே போட்டியிட முடியும் என தெரிகின்றது.மேலும் அந்த கூட்டத்தில், ஹாங்காங் அரசின் தலைமை நிர்வாகியை தேர்ந்தெடுக்கும், தேர்தல் குழுவின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், அக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் வரைவு திட்டம் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதோடு சீனா ராணுவத்துக்கு கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.  ஹாங்காங் நாட்டிற்க்கான தேர்தல் முறையை பல நாடுகள் கண்டித்துள்ளன. பிரிட்டன் சீனா எல்லை மீறுகிறது என கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

Categories

Tech |