Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் ரூ.9 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்….!!

புதுச்சேரி மாநிலம் மாஹேயில் 9 கோடி ரூபாய் மதிப்பிலான 18 கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலையொட்டி மாநில எல்லைகளில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியாக மாஹே மற்றும் கேரள மாநில எல்லையான பூச்தலா சோதனைச் சாவடியில் நடந்த வாகன சோதனையின் போது மினி வேனில் கொண்டு வரப்பட்ட 9 கோடி ரூபாய் மதிப்பிலான 18 கிலோ தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் கோழிக்கோட்டில் இருந்து கண்ணூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் தங்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஆவணங்களை வருவாய் துறையினர் மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகள் ஆய்வு செய்தபிறகு தங்கம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |