Categories
அரசியல் தேசிய செய்திகள்

1இல்ல… 2இல்ல…. 291பேர் பட்டியல் அறிவிப்பு…! ஆட்டத்தை தொடங்கிய மம்தா… அதிரடி காட்டிய திரிணாமுல் காங். ….!!

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் கட்சி சார்பில் போட்டியிட உள்ள அனைத்து வேட்பாளர்களின் பட்டியலையும் முதலமைச்சர் செல்வி மமதா பானர்ஜி ஒரே கட்டமாக வெளியிட்டுள்ளார்.

8  கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. 38  தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழுக் கூட்டம் கல்கத்தாவில் உள்ள முதலமைச்சர் செல்வி மமதா பானர்ஜியின் வீட்டில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை மம்தா பாணர்ஜி வெளியிட்டார். மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 291 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளதாகவும், மூன்று தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ளதாக மமதா பானர்ஜி தெரிவித்தார்.

80வயதுக்கு மேற்பட்டோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை என தெரிவித்த மமதா பானர்ஜி, தான் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். இந்த 291 வேட்பாளர்களில் 50 பெண் வேட்பாளர்களுக்கும், 42 இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு வாய்ப் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மமதா பானர்ஜி, இளம் வேட்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

Categories

Tech |