Categories
உலக செய்திகள்

தமிழுக்கு ஏற்பட்ட அபாயம்…! ஜெர்மனியில் ஏற்ப்பட்ட அவலம்… களமிறங்க தயாரான தமிழர்கள்…!!

ஜெர்மனியிலுள்ள பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதி பற்றாக்குறையால் தமிழ் துறை மூடப்படும் அபாயத்தில் உள்ளது.

ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் 1963 ஆம் ஆண்டு தமிழ்த்துறை கிளாஸ் லுட்விக் ஜானர்ட் என்பவரால் துவங்கப்பட்டதில் தற்போது 12 மாணவர்கள் ,மட்டுமே பயின்று வருகிறார்கள். உலகம் முழுவதும் 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி பிரச்சனையில் சிக்கிய இந்தப் பல்கலைக்கழகதில் தற்போதும் நிதி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்த் துறையே மூடும் அபாயம் உலக தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடும் நிதி சுமையால் அங்கு பணிபுரியும் விரிவுரையாளர் சேவன் வோர்ட்ஸ்மேன் வேலையும் பறிபோகும் நிலையில் உள்ளது. தமிழ்த் துறையின் தலைவராக இருக்கும் எம்.எஸ். உல்ரிக் நிக்லாஸ்சின் பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு நிறைவடைய இருக்கும் நிலையில்  தமிழ் துறைக்கு தலைவராக பொறுப்பேற்க யாரும் வரவில்லை.  ஆசிரியர்களே பொறுப்பேற்க முன்வராததற்கு காரணமும்  நிதிப்பற்றாக்குறை தான் என சொல்லப்படுகின்றது.

கடந்த காலங்களில் இதே போல நிதி பிரச்சினையால் தமிழ்த்துறை சிக்கி தவித்த போது, ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள்  ஐரோப்பிய தமிழர்கள் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் நிதி சேகரித்தனர். தற்போதும் அதே போல நிதியை சேகரிக்க திட்டமிட்டுள்ளனர். ஒட்டு மொத்தத மிழர்களின் எதிர்பார்ப்பும் தமிழ்துறையின் நிதி சிக்கலைபோக்கி தமிழை உலகளவில் பெருமை கொள்ள வைப்பதே ஆகும் என்பதால் நிச்சயம் இதற்கான தீர்வு எட்டப்படும் என நம்பப்படுகின்றது .

Categories

Tech |