Categories
சினிமா தமிழ் சினிமா

‘யாரும் நம்ப வேண்டாம்’… பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்… வெளியிட்ட வீடியோ…!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் குமரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . அண்ணன் தம்பி பாசம் மற்றும் கூட்டு குடும்ப வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சீரியலில் மூர்த்தியின் இரண்டாவது தம்பியாக கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன் . சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

Kumaran Thangarajan (Actor) Wiki, Age, Biography, Movies, Serials

இந்நிலையில் குமரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ‌. அதில் தனது பெயரில் அதிகமான போலி பேஸ்புக் கணக்குகள் இருப்பதாகவும் அதிலிருந்து மெசேஜ்களை அனுப்பப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும் யாரும் அதை நம்ப வேண்டாம் எனவும் , போலியான சமூக வலைதளப் பக்கங்கள் மீது புகாரளித்திருப்பதாகவும் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |