Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அழகுக்கு மட்டுமல்ல… ஆயுர்வேதத்திலும் சிறந்தது ரோஜாப்பூ… எவ்வளவு நன்மை இருக்கு தெரியுமா..?

ரோஜா பூவை பற்றிய மருத்துவ குணங்களை இதில் பார்க்கப்போகிறோம்.

ரோஜா பூ அழகுக்காக  மட்டுமில்லாமல் மருத்துவ உலகிலும் பெரிதும் பயன்படுகிறது. ரோஜா இதழ்களை அப்படியே மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் தைலம், காது வலி, காது குத்தல், காதில் ரோகம் ஆகியவற்றை குணமாக்கும். குழந்தைகளை இதை சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். ரோஜா இதழ்கள்  ஒரு கையை எடுத்து பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி சர்க்கரை சேர்த்து காலை மாலை குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

பித்த மயக்கம், குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் இருந்தால் அதை சரி செய்ய இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து மாலை என இரு வேளை கொடுத்து வந்தால் 7 நாட்களில் பித்தம் அறவே நீங்கி விடும். ரோஜா இதழ்கள் வேலைக்கு ஒரு கைப்பிடி வீதம் மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

Categories

Tech |