நிலாவுக்கு செல்வதற்கு 8 பேருக்கு இலவச டிக்கெட் தரப்போவதாக ஜப்பான் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் மொய்சவா அறிவித்துள்ளார்.
நம் அனைவருக்கும் நிலாவுக்கு செல்ல வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்தக் கனவு நிறைவேற ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. நிலாவிற்கு செல்லும் “டியர் மூன்” என்ற திட்டத்தை விண்வெளி ஆராய்ச்சியில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து மக்களை நிலாவிற்கு அழைத்துச் செல்ல ஸ்டார் ஷிப் என்ற விண்கலத்தை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த வின்கலம் உலகம் முழுவதிலும் இருந்து எட்டு பேரை தேர்ந்தெடுக்க உள்ளதாக ஜப்பானிய தொழிலதிபர் மொய்சவா தெரிவித்துள்ளார். இந்த விண்கலத்தில் செல்ல இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.