பொதுவாக வெயில் காலங்களில் நாம் சாதாரண தண்ணீரை விட ஐஸ் தண்ணீரை தான் விரும்பி குடிப்போம். இதை குடிப்பதால் உடலுக்கு ஜில்லென்று இருப்பதன் காரணமாக ஐஸ் தண்ணீர் குடிக்க நினைக்கிறோம். மேலும் ஐஸ் கட்டியும் முகத்தில் தடவும் பழக்கம் சிலருக்கு உண்டு. அப்படி ஐஸ் கட்டியை தடவுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
பெரும்பாலும் நாம் மேக்கப் போடுவதற்கு முன்பாக ஐஸ் கட்டி வைத்து முகத்தை நன்றாக துடைத்து பின்னர் மேக்கப் போட்டால் சருமத்தில் ரத்த ஓட்டம் மேம்படும்.
மேலும் ஐஸ் கட்டி தடவுவதால் கண்களுக்கு கீழ் உள்ள வீக்கம் குறையும்.
பருவினால் சருமத்தில் ஏற்பட்டுள்ள சிவப்பு நிறம் குறையும்.
எரிச்சல் ஏற்படும் சருமத்திற்கு ஐஸ் கட்டி தடவினால் இதமாக இருக்கும்.
முகப்பருக்கள் உள்ளவர்கள் அதன் மீது ஐஸ் கட்டியை தடவினால் அதற்கான அழற்சி குறையும்.
ஐஸ் கட்டி தடவும் போது சருமம் மென்மையாகி வெப்பத்தினால் ஏற்படும் கருமையை குறைக்கிறது.
சூரிய வெப்பத்திலிருந்து தற்காலிக நிவாரணம் வேண்டுமென்றால் ஐஸ் கட்டியை தடவலாம்.