தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் பணியை சிறப்பாக செய்து வருகிறது. தேர்தல் ஆணையமும் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு சில கட்சிகளில் தொகுதி பங்கீடுவதில் இழுபறி நீட்டித்து வருகிறது. இந்நிலையில் திமுக காங்கிரஸ் கட்சிக்கு குறைவான சீட்டுகளை கொடுத்துள்ளது.
இதனால் காங்கிரஸ் அதிருப்தியில் உள்ள நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பழ.கருப்பையா, “எப்படியும் தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறப்போவதில்லை. எனவே திமுகவை விட்டு விலகி வாருங்கள். இதில் தற்போது ஒன்றும் உங்களுக்கு குடி முழுகிப் போய்விடாது. யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்று பழமொழிக்கு ஏற்ப காங்கிரஸ் ஒரு நல்ல கட்சிதான்.
திமுக பாஜகவின் பி டீம். காங்கிரஸ் பத்து, பதினைந்து சீட்டுக்காக திமுகவில் காத்து கிடப்பது உங்களுக்கு அழகல்ல. எனவே திமுக வை தூக்கி எறிந்து விட்டு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே திமுகவில் பழ.கருப்பையா முக்கிய பொறுப்பில் இருந்தார். தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். இதையடுத்து அவருடைய இந்த அழைப்பை காங்கிரஸ் ஏற்குமா? அல்லது நிராகரிக்குமா? என்று திமுகவின் கையில்தான் இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.