ஐரோப்பா நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது .
ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது . உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய மண்டல இயக்குனர் ஹன்ஸ் குழுக் செய்தியாளர்களை சந்தித்து பேசியதில்,கொரோனா பரவல் 6 வாரங்களாக குறைந்த நிலையில் கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 % அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார் .இதனால் சுமார் 10 லட்சமாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கூறுகிறார்.
மேலும் பிரிட்டன் உட்பட பல நாடுகளில் புதிதாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பபூசி திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஐரோப்பியாவில் 45 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் துவங்கி உள்ளதாக கூறியுள்ளார்.