நடிகர் விமல் மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் விமல் மீது திருநாவுக்கரசர் என்பவர் மோசடி குற்றச்சாட்டை செலுத்தியுள்ளார். அதற்கு விமல் தற்போது பதில் அளித்துள்ளார். இதுகுறித்து விமல் கூறியதாவது, “என்னைப் பற்றி தற்போது சமூக ஊடகங்களில் தவறான செய்தி பரவி வருகிறது. இதை கண்டு நான் மிகவும் மன வேதனை அடைந்துள்ளேன்.
என் வளர்ச்சியை பிடிக்காத எவரோ தான் திருநாவுக்கரசை தூண்டி இதுபோன்ற தவறான செய்தியை பரப்பி வருகின்றனர். திருநாவுக்கரசர் என்பவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களின் நோக்கம் என்னிடம் இருந்து பணம் பறிப்பது ஆகும். இந்நிலையில் அவர் என் மீது இப்படி தவறான செய்திகளை பரப்பியதால் நான் மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.