சட்டப்பேரவை அறிவிப்பின்படி தமிழகத்தில் எட்டு இடங்களில் நூலகம் அமைக்க கோரிய வழக்கு குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 2017 2018 சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழகத்தில் நகரங்களில் நூலகம் மற்றும் காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
இதன்படி சிந்து நாகரிகம் மற்றும் பழம்பெரும் நாகரிக நூலகம் சிவகங்கையில் உள்ள கீழடி பகுதியிலும், இசை நாடகம் மற்றும் கலை சம்பந்தமான நூலகம் தஞ்சாவூரில், நாட்டுப்புறக் கலைகள் குறித்த நூலகம் மதுரையில், தமிழ் மருத்துவம் சார்ந்த நூலகம் திருநெல்வேலியில், பழங்குடியினர் பண்பாடு சார்ந்த நூலகம் நீலகிரி பகுதியிலும், கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த நூலகம் திருச்சி பகுதியிலும், வானவியல் மற்றும் புதுவை சார்ந்த கண்டுபிடிப்புகள் கோயம்புத்தூரிலும் ஆற்றல்களை மற்றும் நூலகம் சென்னையிலும் அமைப்பதற்கான அறிவிப்பு திட்டங்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த திட்டங்கள் வெளியாகி மூன்று வருடங்கள் ஆன நிலையில் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமலதா, அரசு அறிவித்தபடி தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த பொருள் சார்ந்த நூலகம் மற்றும் அரசாட்சி வளர்ப்பதற்கான எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித்துறை மற்றும் கலாச்சாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.