எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய தேசிய வங்கியாக கருதப்படுவது எஸ்பிஐ வங்கி. அதில் மற்ற வங்கிகளை விட வாடிக்கையாளர்கள் மிகவும் அதிகம். ஏனென்றால் அங்கு வழங்கப்படும் சலுகைகள் ஏராளம். அதன்படி எஸ்பிஐ வங்கி தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அதாவது 6.70 சதவீத முதலான வட்டி விகிதங்கள் உடன் 70 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்த சலுகை மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே என தெரிவித்துள்ளது. மேலும் 75 லட்சம் வரையிலான கடன்களுக்கு 6.70 சதவீத வட்டியும், 70 லட்சத்திற்கு மேலான கழகங்களுக்கு 6.75 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. யோனோ செயலி மூலம் விண்ணப்பித்தால் 5 bps கூடுதல் வட்டி சலுகையும், கடன் வாங்கும் பெண்களுக்கு 5bps சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது.