வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொட்டையூர் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருடைய மனைவியான சத்யாவிற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் பல இடங்களில் சிகிக்சை பெற்று வந்தார். ஆனால் எந்த வித பலனும் இல்லாததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். சம்பவம் நடந்த அன்று சத்யாவிற்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டதால் அவர் எலி மருந்தை சாப்பிட்டுவிட்டு மயங்கி கிடந்துள்ளார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பின் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மாற்றப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா பரிதாபமாக இறந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வலங்கைமான் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.