நடிகர் விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் படத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மோகன் தாஸ் . இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கடந்த மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இந்த படத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .
நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்தில் இவர்கள் ஸ்டண்ட் கலைஞர்களாக பணி புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 65 படத்திலும் இவர்கள் ஸ்டண்ட் கலைஞர்களாக பணிபுரிய ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியானது . தற்போது இவர்கள் விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் படத்தில் இணைந்துள்ளது படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .