Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

1 kg கேக் வாங்குனா…. உங்க பைக்குக்கு இது FREE… அதிரடி ஆபர் அறிவித்த பேக்கரி…!!

புதிதாக திறக்கப்பட்டுள்ள பேக்கரியில் ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு கிலோ பெட்ரோல் இலவசமாக தருவதாக கடையின் உரிமையாளர் அறிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் பெட்ரோல் விலையை கண்டித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் சிலர் பெட்ரோல் விலை உயர்வை கேலி கண்டிக்கும் விதமாக பெட்ரோலை இலவசமாகக் கொடுத்து வருகின்றனர். அப்படித்தான்  திருச்சியை சேர்ந்த சகாயராஜ் என்பவரும்  ஒரு ஆபர் கொடுத்துள்ளார்.

அதாவது  திருச்சியில் புதிதாக பேக்கரி ஒன்றை ஆரம்பித்த இவர் அந்த பேக்கரி திறப்பு விழாவின்போது “ஒரு கிலோ கேக் வாங்கினால், ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்” என்று  அறிவித்துள்ளார். மேலும் இந்த ஆபர் ஒரு மாதம் வரை இருக்கும் என்ற தகவலையும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  “பெட்ரோல் விலை அதிகரித்துக் கொண்டே வரும் சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் கொடுத்தால் அவர்களைக் எளிதாக  கவர்ந்து கடைக்கு வர வைத்து விடலாம் என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |