கனடாவில் தாய் மகள் இருவரும் சேர்ந்து வாங்கிய லாட்டரியில் 500,000 டாலர் பரிசு விழுந்தது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரிட்டிஷ் நாட்டின் கொலம்பியாவை சேர்ந்த தெரசா வொர்த்திங்டன் மற்றும் அவரின் மகள் அலெக்சா இருவரும் மருத்துவ ஊழியர்கள் ஆவர். இவர்களுக்கு லாட்டரி விளையாட்டில் அதிக ஈடுபாடு உண்டு. மேலும் லாட்டரியில் வரும் அதிர்ஷ்ட எண்களை இவர்கள் இருவரும் சேர்ந்து தேர்வு செய்வது வழக்கம். இந்நிலையில் அவர்கள் வாங்கிய லாட்டரிக்கு டாலர் 500,000 பரிசு விழுந்துள்ளது. இதை தெரசா அவரின் கணவரிடம் கூறும்போது அவர் நம்பவில்லை.
பொய் சொல்வதாக நினைத்த அவர் அதற்குப் பின்னரே நம்பினார். தெரசாவும் அலெக்ஸும் பயணம் செல்வதற்கு பாதுகாப்பாக இருக்கும்போது தான் ஆஸ்திரேலியாவுக்கு செல்லப் போவதாக கூறியுள்ளார். மேலும் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதாகவும் கூறியுள்ளார். லாட்டரியில் 500,000 டாலர் விழுந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரசா கூறினார்.