அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் முதன்முதலாக முக கவசம் அணிய வேண்டாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று பரவல் குறைந்து கொண்டு வரும் நிலையில் டெக்சாஸ் கவர்னர் கிரேக் அபோட் செவ்வாய்க்கிழமையன்று முகக்கவசம் ஆணையை நீக்குவதாக தெரிவித்துள்ளார். டெக்சாஸில் 42,000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் பெரும்பான்மையான மக்கள் முகமக்கவசம் அணிந்த ஒரு அறையில் இருந்து பேசியுள்ளனர் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை .ஆகவே “மாநிலம் தழுவிய உத்தரவை நீக்குவது தனிப்பட்ட பொறுப்பை முடிவுக்கு கொண்டு வருவது இல்லை” என்று கவர்னர் அபோட் தெரிவித்தார்.
அமெரிக்கா முழுவதும் கவர்னர்கள் முடிவுகளை எடுக்கும் நேரத்தில் கொரோன வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்துவது நோக்கமாக கொண்டு தனது முடிவை தெரிவித்தார். சுகாதார நிபுணர்கள் தொற்றுநோய் அச்சுறுத்தல் இன்னும் வெகு தொலைவில் உள்ளதாக கூறியுள்ளனர். டெக் சாஸில் கடந்த ஒரே மாதத்தில் வைரஸ் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் கவர்னர்கள் கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளார்கள்.
டெக்சாஸ் முழுவதும் ஜூலை மாதம் முகக்கவசம் உத்தரவை நீக்கி அபோட் அறிவித்தார். ஜன நாயக சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த உத்தரவை ரத்து செய்வதற்கு முன்னாள் அபோட் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தெரிவித்தார். இந்நிலையில் ஜனநாயக கட்சியின் மாநில பிரதிநிதிகள் பேனா ரேமண்ட் திங்கட்கிழமை அன்று அபோட் அனுப்பிய கடிதத்தில் டெக்சாஸ் அதிக தொற்றுக்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அதிக இறப்புக்களை அனுபவிக்க நேரிடும் என்று எழுதியுள்ளார்.