Categories
உலக செய்திகள்

இந்தியாவை குறிவைக்கும் சீனா… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

இந்திய துறைமுகங்களை சீன ஹேக்கர்கள் தீவிரமாக குறிவைத்து வருவதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

மும்பையில் கடந்த அக்டோபர் மாதம் திடீரென ஏற்பட்ட மின் தடைக்கு சீனா ஹேக்கர்கள் தான் காரணம் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் கூறியது. அதேபோல் தற்போது இந்திய துறைமுகங்களையும் தீவிரமாக குறிவைத்து ஹேக் செய்வதாக அமெரிக்கா நிறுவனம் அறிவித்தது. அமெரிக்க நிறுவனமான யு எஸ் பார்ம் ரெக்கார்ட் யூசர் வெளியிட்ட தகவலில் தாக்குபவர் தீவிரமான செயலில் இருப்பதாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளானர்.

இந்தியாவின் மின்சாரத் துறை ஊடுருவலை சைபர் அதிகாரிகள் தடுத்தாலும் இந்திய துறைமுகங்களில் நெட்வொர்க் அமைப்பு சீன அரசால் ஹேக் செய்யப்பட்டு திறக்கப்பட்ட இணைப்பு ஒன்று செயலில் இருப்பதாக நிறுவனம் தெரிவிக்கப்பட்டது. இந்திய துறைமுகங்களில் பாதுகாப்பை படுத்த வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை படுத்தியுள்ளது.

இதனை அடுத்து ரெட் எக்கோ ரெக்கார்ட் பியூச்சர் நிறுவனம் இந்தியாவின் பவர் கிரிட் மற்றும் இரண்டு கடல் துறைமுகங்களின் கீலுள்ள 10 நிறுவனங்களை ஹேக்கர்கள் குறி வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளது. பிப்ரவரி 28 வரை ஹேக் செய்த இணைப்புக்கள் பல செயலில்  இருந்ததுள்ளதாக   நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் எந்தவித ஆதாரமும் இல்லாமல் சீனாவின் மீது குற்றம் சாட்டுவது என்பது அமெரிக்காவின் பொறுப்பற்ற நடத்தையும் தீமை எண்ணத்தையும் வெளிபடுத்துகிறது என்று வாங் வென்பின் என்ற சீன வெளியுறவு அமைச்சகம்  கூறியுள்ளது.

Categories

Tech |