Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ள இந்த பழத்தை சாப்பிடுங்க…. பல நோய்களுக்கு தீர்வு..!!

முந்திரி பழம் சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

முந்திரியைப் பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் முந்திரி பழத்தை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பெரும்பாலும் கிராமங்களில் தான் பார்க்க முடியும். முந்திரி பழத்தை சாப்பிட்டால் நம்பமுடியாத பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். அது என்ன என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

முந்திரி பழத்தில் புரோட்டீன், பீட்டா, கரோட்டின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் நார்ச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. வைட்டமின் சி அதிகம் இருக்கும்.

நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுபவர்கள் முந்திரிப் பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

முந்திரிப் பழத்தை மரத்திலிருந்து பறித்து 24 மணி நேரத்திற்குள் கட்டாயம் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் அது அழுகி விடும். அதனால் இப்பழம் இந்தியாவில் மிகவும் விற்கப்படுவதில்லை.

முந்திரிப்பழத்தை தண்ணீரில் போட்டு அரைமணி நேரத்துக்குப் பிறகு, பழத்தைத் தனியாக எடுத்துவிட்டு தண்ணீரைக் குடித்தால், உடல் எடை குறையும்.

இதன் ஜூஸானது பிரேசிலில் மிகவும் பிரபலம். இதை  சாப்பிட்டால் நுரையீரல் செயல்பாடு சீராக இருக்கும். இதயத்தை காப்பதற்கு இது உதவுகிறது.

எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க இது உதவுகிறது. கல்லீரலை  சுத்தப்படுத்த உதவும். கொலஸ்ட்ரால் அளவு குறைகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

புற்றுநோயை தடைசெய்யும். மலச்சிக்கலைப் போக்குகிறது. தேச பராமரிப்பிற்கு இது அதிக அளவில் உதவுகிறது.

Categories

Tech |