ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள தூக்கம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜதுரை. இவர் நேற்று தனது வீட்டில் குடும்பத்துடன் தூங்கியுள்ளார். பின்னர் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தனது வீட்டில் இருந்த ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் காணாமல் போயிருந்தது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அவர் அப்பகுதியில் விசாரித்தபோது கொத்தனார் வேலை செய்யும் மாணிக்கம் மற்றும் மனோகரன் ஆகிய 2 பேரும் செல்போனை திருடியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராஜதுரை அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான மனோகரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.