தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் ஒருவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷ்னர் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜிநகர் மில் காலனி பகுதியில் கருணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி ரயில்வே ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவில் அருகில் கடந்த மாதம் 7ஆம் தேதி கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக திருச்சி கன்டோன்மென்ட் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் கன்டோன்மென்ட் காவல்துறையினர் கருணாமூர்த்தி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு பரிந்துரை செய்துள்ளனர். அதனை ஏற்றுக்கொண்ட கமிஷனர் குண்டர் சட்டத்தில் கருணாமூர்த்தியே கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.