குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தந்தையே மகனை தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் பகுதியில் வசித்து வருபவர் ராம்கி-காயத்ரி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்த தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த ராம்கி தனது மூத்த மகனான சாய்சரண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதனால் உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்த சாய்சரணை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காத காரணத்தினால் சாய்சரண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காயத்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் ராம்கியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.