Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ப்ளீஸ் வேண்டாம்…! 30நிமிடம் கெஞ்சிய டிடிவி… பிடிகொடுக்காத சசிகலா ….!!

அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சசிகலா, அவரின் தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். இதுகுறித்து பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சின்னம்மாவின் முடிவை நான் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினேன். 30 நிமிடம்  நிறுத்தி முடிவை மாற்ற சொல்லி சொன்னேன். இல்லபா இது தான் சரியான முடிவு என்று சொல்லி, இதான் சரியான முடிவு. சின்னம்மாவின் முடிவு எனக்கே சோர்வை ஏற்படுத்தி உள்ளது.

சட்டசபை தேர்தலில் அமமுக தலைமையில் கூட்டணி பேச்சு பேசிக் கொண்டிருக்கிறோம். தலைமை கழகத்தில் 1,300பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார்கள். நானும் போட்டியிடுகிறேன் 10ஆம் தேதி வரை விருப்ப மனு கொடுக்கப்படுகின்றது. பின்னர் வேட்பாளர் பட்டியல் அறிவிப்போம். இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி முடிவாகும், எந்த எந்த கட்சியுடன் கூட்டணி என தெரிவிப்பேன் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Categories

Tech |