காலம் மாற மாற உலகிலுள்ள ஒரு சில பறவை இனங்களும், விலங்கினங்களும் அழிந்து வருகின்றன. இதனால் பறவைகளையும், விலங்குகளையும் பாதுகாப்பதற்காகவே அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் இயற்கை ஆர்வலர்களும் இதில் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் வருடந்தோறும் வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகளும் நடக்கின்றது. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் காணப்பட்ட Black Browed Babbler என்ற பறவை 170 வருடங்களாக மக்களுடைய கண்களில் தென்படாமலே இருந்துள்ளது.
எனவே இந்த பறவை இனமே அழிந்து விட்டது என்று இயற்கை ஆர்வலர்கள் நினைத்துள்ளனர். இந்நிலையில் இந்தோனேசியாவின் காட்டு பகுதியில் இந்த வகை பறவைகள் அரிதாக காணப்பட்டுள்ளன. இதனால் இயற்கை ஆர்வலர்கள் நீண்ட காலம் கழித்து பார்த்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.