சூடான் நாட்டு விமானத்தில் பூனையொன்று பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூடான் நாட்டு விமானம் ஒன்று கத்தாருக்கு செல்வதற்காக சர்வதேச விமான நிலையம் ஒன்றில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த விமானம் புறப்படும் பொழுது பயணிகளுடன், பூனையும் மறைந்திருந்து பயணித்துள்ளது. மேலும் விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களில் மறைந்திருந்த அந்த பூனை விமானியின் அறைக்குள் நுழைந்து விமானி மீது பாய்ந்து அவர்களை தாக்கியுள்ளது.
இதனால் விமானி அந்த விமானத்தை புறப்பட்ட இடத்திலேயே தரை இறக்கியுள்ளார். மேலும் பூனையை விமானத்துக்குள் இருந்து வெளியேற்றிய பின் அந்த விமானம் தாமதமாக புறப்பட்டுச் சென்றுள்ளது. மேலும் பூனை எவ்வாறு விமானத்திற்குள் சென்றது? என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை. இச்சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது