Categories
உலக செய்திகள்

கருப்பினத்தவரை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரி… வழக்குப்பதிய மறுக்கும் அதிகாரிகள்… கோபத்தில் குடும்பத்தினர்…!!

அமெரிக்காவில் கருப்பினத்தவரை காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்ற சம்பவத்தில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி Donnie Sanders என்ற 47 வயது நிரம்பிய கருப்பினத்தவரை காவல்துறை அதிகாரி ஒருவர்  துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதால் அந்த காவல்துறை அதிகாரி மீது வழக்குப்பதிய முடியாது என்று  அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகளிடம் கூறும்போது, “Donnie Sanders கையில் ஒரு ஆயுதத்தை வைத்துக்கொண்டு தன்னை நோக்கி நகர்ந்து வந்ததாக நினைத்தேன். அதனால் அவரை சுட்டுக் கொன்றேன்” என்று கூறினார்.

ஆனால் Donnie Sanders-சிடம் எந்த வித ஆயுதமும் இல்லை என்று விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் Jackson Country வழக்கறிஞர் Jean Beters Baker , “Donnie Sanders ஓர் ஆயுதத்தை வைத்துக்கொண்டு தன்னை தாக்க வருவதாக நினைத்து தற்காப்பிற்காக சுட்டதாக கூறும் காவல்துறை அதிகாரியின் நம்பிக்கையும் ஒரு சாட்சி தான். அதனை நான் ஏற்று கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இதனால் Donnie Sanders-ன் குடும்பத்தினர் கோபத்தில் இருக்கின்றனர். மேலும் கண்டிப்பாக தங்களுக்கும், கருப்பினத்தவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |