சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் 2வது அலை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
கொரோனா வைரஸால் உலக அளவில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் முதல் அலையிலிருந்து இரண்டாம் நிலை எவ்வாறு மாறுபட்டிருந்தது என்பதை கண்டறிவதற்காக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகமும் NZZ என்ற பத்திரிகையும் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் முதல் அலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் 19% பேர்.
ஆனால் இரண்டாவது அலையின் போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78% உயர்ந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. மேலும் பல நாடுகளிலும் சுவிட்சர்லாந்தை போன்று கொரோனாவின் இரண்டாம் அலை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரியவந்துள்ளது. இதற்கிடையில் சுவிட்சர்லாந்தில் 2020நவம்பர்- 2021 ஜனவரிக்கு இடையில் உள்ள நாட்களில் அருகில் இருக்கும் நாடுகளை விட அதிக அளவில் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.