Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கூட்டணி இன்னும் உறுதியாகல…! யூடர்ன் போட்ட கமல்…. அதிர்ச்சியில் சரத்குமார் …!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதான கட்சிகளாக இருக்கும் திமுக – அதிமுக தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றை கூட்டணி கட்சிகளுடன் இறுதி செய்து வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து வந்த சமத்துவ மக்கள் கட்சியும், திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த இந்திய ஜனநாயக கட்சியும் அதிலிருந்து விலகி கமலஹாசனின் மக்கள் நீதி மையத்துடன் இணைந்திருந்தன.

இது தொடர்பான அரசியல் அரங்கில் விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடந்த சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் மக்கள் நீதி மையம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக் கட்சி கூட்டணி  அமைத்துள்ளதாக சரத்குமார் தெரிவித்தார்.

மேலும் கமலஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்ட சரத்குமார், ராதிகா சரத்குமார் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறுவார் என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கேள்வி எழுப்பியற்கு பதிலளித்த கமல், கூட்டணி தொடர்பாக பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என தெரிவித்தார். இது சமத்துவ மக்கள் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |