பிரான்சில் பிரிட்டனை சேர்ந்த பொறியாளரின் குடும்பம் கொல்லப்பட்ட வழக்கில் காவல்துறையினர் உண்மையை மறைக்கின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரான்ஸில் உள்ள ஒரு சுற்றுலா தளத்திற்கு 2012ஆம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த பொறியாளர் Saad-Al-Hilli, அவரது மனைவி Iqbal, Iqbal-ன் தாய், மற்றும் Saad-Al-Hilli-ன் ஏழு வயது மகள் Zainab ஆகிய 4 பேரும் சென்றிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் 4பேர் மீதும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் பொறியாளர் Saad-Al-Hilli, அவரது மனைவி Iqbal, Iqbal-ன் தாய் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் . மேலும் அங்கு சைக்கிளில் வந்த பிரான்சை சேர்ந்த Sylvain Mollier என்பவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆனால் இந்த வழக்கில் ஆதாரங்கள் எதுவுமே கிடைக்கவில்லை. இதுதொடர்பாக பாரிசில் உள்ள லாட்ஜில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கும்பல் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளது. அந்த கும்பலில் முன்னாள் காவல்துறை அதிகாரியும் , ராணுவ அதிகாரியும் இருப்பதாக தகவல் வெளியானது. அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் பிரான்ஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட அதே வகை குண்டுகள் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் பாரிசில் ஒரு கும்பல் மனோதத்துவ நிபுணர் ஒருவரை கொல்ல முயன்றது. அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளும், குண்டுகளும் பொறியாளர் குடும்பத்தை தாக்க பயன்படுத்திய அதே குண்டுகள் என்று தெரிய வந்தது.இதனால் இந்தக் கும்பல் தான் பொறியாளர் குடும்பத்தை கொலை செய்திருக்கும் என்று காவல்துறையினர் கூறி வந்தனர்.
இதுகுறித்து Saad-Al-Hilli -யின் சகோதரர் Zaid கூறுகையில், “துப்பாக்கி சூடு நடந்த போது சைக்கிளில் வந்த Sylvain Mollier என்பவரை கொல்ல தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும். அது தவறுதலாக தான் எனது சகோதரன் குடும்பத்தின் மீது நடத்தப்பட்டுள்ளது ” என்று கூறிவந்தார். ஆனால் Zaid -ன் குற்றச்சாட்டை பிரான்ஸ் காவல்துறையினர் நிராகரித்துள்ளனர். இதனால் அவர், “உண்மையை மூடி மறைக்க பிரான்ஸ் காவல்துறையினர் முயன்று வருகின்றனர். மேலும் இந்த வழக்கை தீர விசாரிக்க வேண்டும்” என்று பிரிட்டன் காவல்துறையினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.