இலங்கை யாழ்ப்பாணத்தில் தாயே தனது 8 மாத குழந்தையை அடித்து துன்புறுத்தியதால் கைது செயப்பட்டார்.
இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த 23 வயதான பெண் ஒருவர் தனது குழந்தையை பிரம்பால் அடித்தும் , ஒரு கையால் குழந்தையை தூக்கி சென்றும் துன்புறுத்தி வந்துள்ளார். அவரின் கணவர் அரபு நாட்டில் வேலை பார்த்து வருகிறார் .அந்த பெண்ணின் சகோதரன் அவர் குழந்தையை துன்புறுத்தும் செயலை கண்டு உடனே அதனை வீடியோவாக எடுத்து சமூக ஊடங்களில் பதிவிட்டுள்ளார் .
https://twitter.com/PTTVOnlineNews/status/1366960627789361154?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1366960627789361154%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Fnewsview%2F94930%2FMother-who-beat-her-nine-month-old-baby-in-srilanka
இந்த வீடியோ காட்சிகளை பார்த்த நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாண காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அப்பெண்ணை கைது செய்தனர்.