டென்மார்க் நாட்டில் அகதிகளாக இருக்கும் சிரியா மக்களை அவர்களின் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப டென்மார்க் முடிவு செய்துள்ளது.
சிரியா தலைநகரமான டமாஸ்கஸ் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகள் பாதுகாப்பாக இருப்பதாக கூறி டென்மார்க்கில் உள்ள 94 சிரிய அகதிகளை அவர்களின் சொந்த நாட்டுக்கே அனுப்ப முடிவு செய்துள்ளது. மேலும் டென்மார்க் அவர்களின் வாழிட உரிமத்தையும் ரத்து செய்துள்ளது .டென்மார்க் சிரிய அகதிகளை அவர்களின் நாட்டுக்கு திரும்பிச் செல்வதற்க்கு அனுமதித்ததே தவிர கட்டாயப்படுத்தி வெளியே அனுப்பவில்லை. அவ்வாறு அவர்கள் வெளியேறவில்லை என்றால் அவர்களை நாடு கடத்தல் முகாம்கள் என முகாம்களில் அடைக்கப் படுவார்கள் என்று கூராயுள்ளது .
இதற்கு பயந்தே சிரியா மக்கள் அவர்களின் சொந்த நாடான சிரியாவிர்க்கே சென்று விடுவார்கள் என்று அகதிகள் ஆதரவு கொண்ட நிறுவனங்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கடந்த மாதம் டென்மார்க் புலம்பெயர்தல் துறை அமைச்சரான மாட்டியஸ் டெஸ்பாயி பேசியதில் சிரியாவில் இருந்து வரும் அகதிகளுக்கு நாங்கள் ஆரம்பத்திலேயே அவர்களது வாழ்வு உரிமம் தற்காலிகமானது தான் என்று கூறியிருந்தோம். அவர்களுக்கு பாதுகாப்பு தேவை இல்லை என்று நிலை வரும்போது அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்பதையும் அவர்களுக்கு தெரிவித்திருந்தோம் என்று கூறினார்.
ஆனால் தொண்டு நிறுவனங்கள் இது குறித்து பேசுகையில் சிரிய அகதிகளை அவர்கள் நாட்டிற்கே மீண்டும் அனுப்பினால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளனர்.