கோடைக்காலத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க மத்திய ரயில்வே துறை பிளாட்பார்ம் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளது.
கொரோனாவால் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் சந்தித்த நிலையில் இப்போது புதிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது மும்பை இந்தியன் ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விலையை ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளது. தற்போது பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலை 10 ரூபாயாக இருந்த டிக்கெட்டின் விலை தற்போது அது 50 ரூபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் பயணிகள் அதிக அளவு ரயில் நிலையங்களில் குவிவார்கள்என்ற காரணத்தினால் விலை ஏற்றப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம் மார்ச் 1 முதல் தொடங்கி ஜூன் 15 வரை அமலில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மும்பை, புனே ஆகிய பகுதிகளில் பிளாட்பாரம் டிக்கெட் விலையை 10 இல் இருந்து 50 வரை மத்திய ரயில்வே உயர்த்தியுள்ளது. இதனிடையே மும்பையில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து 3.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 11,400 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.