Categories
அரசியல்

பரபரப்பாகும் தேர்தல் களம்…. உதயநிதி போட்டியிடுவாரா…? முடிவு யார் கையில்…?

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா இல்லையா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

சட்ட பேரவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் திராவிடக் கட்சிகளான திமுக அதிமுக எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணியிடும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தொண்டர்களிடம் இருந்தும் விருப்பமனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது.இதைத்தொடர்ந்து திமுகவின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியில் போட்டியிடுவதாக சில தினங்களுக்கு முன்பு மனுத்தாக்கல் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியில் திமுகவிற்கு சாதகமாக வாக்குகள் உள்ளதால் உதயநிதி ஸ்டாலின் அங்கு போட்டியிடுவதாக கூறப்பட்டது. இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது நெருங்கிய நண்பர்களுடன் பேசியதில் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்பது தான் என்னுடைய லட்சியம்.எனக்கு தேர்தலில் போட்டியிடவோ எம்எல்ஏ ஆவதிலோ விருப்பமில்லை என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து திமுகவின் முதன்மைச் செயலாளர் கே என் நேரு மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இருவரும் சேர்ந்து தேர்தல் பற்றி செய்தியாளரிடம் பேசுகையில் உதயநிதி போட்டியிடுவாரா இல்லையா என்பது பற்றிய கேள்விக்கு திமுக தலைவர் ஸ்டாலின் முடிவெடுக்க வேண்டும் என்று நேரு கூறினார்.

Categories

Tech |