Categories
அரசியல்

12 இல்ல 8 தொகுதியில் ஜெயிச்சா போதும்…. எங்களுக்கு வேண்டியது கிடைச்சிரும் – வைகோ

8 தொகுதியில் வெற்றி பெற்றாலே அங்கீகாரம் கிடைத்துவிடும் என்று திமுக கூட்டணியில் உள்ள மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது அதற்குண்டான ஏற்பாடுகள் நடத்து வருகிறது. திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்தோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகலும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் வரும் வெள்ளிக் கிழமைக்குள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்திட திட்டமிட்டுள்ளது. இதற்காக திமுகவின் தொகுதி பங்கீடு குழு முழுவீச்சுடன் செயல்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் திமுக அதிக இடங்களில் போட்டியிடுவதாக முனைப்பு காட்டுவதால் கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த அளவே இடம் ஒதுக்கியுள்ளது. மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ 8 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் என்று திமுக நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.

இதற்குப் பின் செய்தியாளரிடம் பேசிய வைகோ மதிமுக தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என்று திறம்பட கூறியுள்ளார். 12 தொகுதியில் போட்டியிட்டால் தான் தனிச் சின்னம் கிடைக்கும் அப்போதுதான கட்சிக்கு அங்கீகாரமும் கிடைக்கும் என்பதால் 12 தொகுதி எதிர்பார்க்கிறீர்களா என்ற கேள்விக்கு 8 தொகுதியில் வென்றாலே வெற்றி கிடைக்கும் என்று வைகோ கூறியுள்ளார்.இதனிடையே மதிமுகவிற்கு 10ற்கும் கீழ்தான் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |