இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளும், பாலியல் பலாத்காரமும் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதுகாப்பற்ற சூழலை உணர்கின்றனர். மேலும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை அளித்து வருகிறது. ஆனாலும் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் கர்நாடக ஆளும் பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி என்பவர் இளம் பெண் ஒருவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். இந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்கள் மற்றும் அம்மாநில ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.