கோயம்புத்தூர் ஆனைகட்டி சாலையிலுள்ள ராஜ் சம்பத் என்ற குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் தன்னுடைய நண்பர்களான சுரேஷ், ஜெயக்குமார், வெள்ளியங்கிரி, ஆகியோருடன் சம்பவத்தன்று தன்னுடைய பகுதியில் வைத்து மது அருந்தி புரோட்டா சாப்பிட்டுகொண்டிருந்துள்ளனர். அப்போது வெள்ளியங்கிரி ஜெயக்குமாரின் புரோட்டாவை எடுக்க முயன்றுள்ளார். அப்போது ஜெயக்குமார் புரோட்டாவை எடுக்காத கைய எடு என்று கூறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த ஜெயக்குமார் கீழே கிடந்த கல்லை எடுத்து வெள்ளியங்கிரி கடுமையாக தாக்கியுள்ளார். அப்ப்போது வெள்ளியங்கிரி கோபத்தில் பக்கத்தில் கிடந்த கட்டையை எடுத்து ஜெயக்குமாரை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வெள்ளியங்கிரி மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புரோட்டாவிற்கு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.