திருவாரூர் மாவட்டத்தில் ஜோதிடத்தை நம்பி தனது 5 வயது மகனை தந்தை எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் மூட நம்பிக்கைகளை நம்பி பெரிதும் ஏமாறுகிறார்கள். ஆனால் அதிலிருக்கும் விபரீதங்கள் பற்றி யாரும் அறிவதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தாலும் மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பெரும்பாலான மக்கள் ஜோதிடத்தை நம்புகிறார்கள். அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துகிறார்கள். அதனால் சில கொடூர சம்பவங்களும் நடந்து கொண்டு வருகின்றன.
அதன்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் என்ற பகுதியில் ஜோதிடத்தை நம்பி தனது ஐந்து வயது மகனை மண்ணெண்ணையை ஊற்றி தந்தை கொடூரமாக கொலை செய்துள்ளார். எதிர்காலத்தில் மகனால் ஆபத்து நேரலாம் என்று ஜோதிடர் கூறியதால், அதனை நம்பி தந்தை, தன் மகனை கொடூரமாக எரித்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனை கொலை செய்த தந்தையை சிறையில் அடைத்துள்ளனர். மூடநம்பிக்கை என்ற பெயரில் பெற்றோர்கள் இவ்வாறு நடந்து கொள்வது எப்போது முடிவுக்கு வரும் என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது.