சவுதி அரேபியாவில் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதால் நாடு முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
சவுதி அரேபியாவில் சில நாட்களுக்கு முன்பு பயங்கர ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்வதற்குள்ளேயே தற்போது மீண்டும் ஒரு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று ஹவுத்தி குழுவின் ஏவுகணைகள் தெற்கு நகரமான ஜிசானில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் நகரின் பல கடைகள் மற்றும் கார்கள் சேதமடைந்துள்ளது. ஹவுத்தி போராளிகள் சிறிய ட்ரோன்கள் மற்றும் பெரிய ஏவுகணைகள் மூலம் சவுதி நகரங்கள் மற்றும் ராணுவ தளங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சவுதி நகரம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
#PICTURES: #SaudiArabia's civil defense: A military projectile launched by #Houthis fell in Jazan, injuring five civilians pic.twitter.com/wUgaoOmAYv
— Saudi Gazette (@Saudi_Gazette) March 1, 2021