Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

துப்புரவு பணியாளரின் அருவருப்பான செயல்… பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவு பணியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் திருபுவனம் பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம். இவர் பி.எஸ் பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பள்ளிக்கு வந்த ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் பரமசிவம் மீது திருபுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் பரமசிவத்தை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் துப்புரவு பணியாளர் பரமசிவத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் ரூபாய் 10000 அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு புதுச்சேரி மாநில அரசு ரூபாய் 2 லட்சம்  நிதியாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |