Categories
உலக செய்திகள்

OMG: உலகிற்கே அதிர்ச்சி தரும் செய்தி… தீவிர கண்காணிப்பில் ஆராய்ச்சியாளர்கள்…!!!

 அண்டார்டிகாவில் உள்ள மிகப் பெரிய பனிக்கட்டி ஒன்று இரண்டாக பிளந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அண்டார்டிகாவில் நியூயார்க் சிட்டியை  விட மிகப் பெரிய பனிக்கட்டி ஒன்று உள்ளது. நம் பூமியின் மொத்த பரப்பளவு 71 சதவீதம் நீரினால் சூழப்பட்டும் மீதமுள்ள 29 சதவீதம் நிலப்பரப்பை கொண்டுள்ளது. உலகத்தில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருவதால் பனிப்பாறைகளின்  அடுக்குகள் உருகி வருகிறது. ஆகவே கடல்நீரின் நீர்மட்டமும்  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நியூயார்க்கில் உள்ள இந்த மிகப் பெரிய பனிக்கட்டி 1270 சதுர கிலோ மீட்டர் அளவை கொண்டுள்ளது என பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

மேலும் இந்த பெரிய பனிக்கட்டி வெடிப்பு BAS பிரிட்டிஸ் ஆராய்ச்சி மையத்தின் அருகில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிக்கட்டி வெடித்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கருதி ஆராய்ச்சி மையத்தை தற்போது தற்காலிகமாக காலி செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பனிக்கட்டி  பாதிப்பிலிருந்து சுமார் 12 பேர் தற்போது காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பனிக்கட்டியின் அளவு மிகப் பெரியது என்பதால் வெடிப்பு ஏற்படும் போது மிக அதிகமான பனிக்கட்டிகள் வெடித்து சிதறி  வெளியேறுவதற்கான  வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பிரிட்டிஷ் அண்டார்டிகா சர்வே BAS பனிக்கட்டியின் நிலைமையை அவ்வப்போது கவனித்துக்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |