திருவிழாக்களின் பொது கச்சேரிகள், ஆட்டம் பாட்டம் என கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். இதேபோன்று சேலம் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்களின்போது மேடை கச்சேரிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த மேடை கச்சேரிகளில் திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடும்போது முகம் சுளிக்கும் வகையில் ஆடுவதாக குற்றம்சாட்டும் எழுந்து வருகிறது. நடன கலைஞர்கள் ஆடுவதை பார்ப்பவர்களையும் மேடையில் அழைத்து ஆடவைத்து முகம் சுழிக்க வைத்து வருகின்றனர். சமீபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் பட்ட பட்டி என்ற கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் முகம் சுளிக்கும் வகையில் நடனக்கலைஞர்கள் நடனம் ஆடியுள்ளனர்.
இதனால் தமிழ் மாநில திரைப்பட கிராமிய நடன கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பாக சம்பந்தப்பட்ட வேலூர் மாவட்ட உயர் அதிகாரியிடம் நேரடியாக சென்று மனு கொடுத்துள்ளனர். இது போன்ற நடன கலைஞர்களால் தங்களுடைய கிராமியக் கலைகள் பாதிக்கப்படுவதாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இதனால் வருங்கால இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.