சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர்-குன்னம் தொகுதியில் 3 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் பகுதியில் மூன்று தேர்தல் பறக்கும் படையினர் இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தல் பறக்கும் படையில் ஒரு ஆண் போலீஸ், ஒரு பெண் போலீஸ், ஒரு தாசில்தார், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் அடங்குவர். இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்கள் மக்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் எடுத்து செல்லப்படுகிறதா? என்று வாகனங்களை தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.