Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஐபிஎல் 2021” எந்தெந்த மைதானத்தில் நடக்கும்…. பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு…. ரசிகர்கள் எதிர்பார்ப்பு….!!

ஐபிஎல் போட்டிகளை எந்தெந்த மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற முடிவினை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

சென்னையில் சமீபத்தில் ஐபிஎல் போட்டியின் 14 வது சீசனிற்கான ஏலம் நடந்து முடிந்தது. ஐபிஎல் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றனர். இதுவரை ஒவ்வொரு அணியும் தனது சொந்த மைதானத்தில் ஏழு போட்டியிலும் வெளி மைதானத்தில் 7 போட்டிகளிலும் விளையாடுவார்கள். ஆனால் தற்போது பிசிசிஐ 6 மைதானத்தில் மட்டுமே போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.அவை சென்னை, பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகும்.

மேலும் மும்பையில் அதிகமாக பரவி வரும் கொரோனாவின் காரணத்தால் அங்கு போட்டிகள் நடத்தப்படாது என அறிவிப்பு வெளிவந்தது. இதனை எதிர்த்து அங்குள்ள வீரர்கள் கொடுத்த அழுத்தத்தினால் அங்கு போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்கு பார்க்க அனுமதி கிடையாது. இதில் அகமதாபாத் எந்த அணிக்கும் சொந்த மைதானம் கிடையாது இதற்கு பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த அணிகளின் ஒரு தலைவர் தனது சொந்த மைதானத்தில் 5 அல்லது 6 போட்டிகளில் வெற்றி பெற்று வெளியில் சில போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றாலே பிளே ஆப் தேர்வுக்கு முன்னேற முடியும் என்று கூறினார். ராயல் சேலஞ்சர்ஸ்,  மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் தனது சொந்த மைதானத்தில் போட்டியிடுவதால் அவர்களுக்கு கூடுதல் பலம் அளிக்கும் வகையில் இருக்கும். இந்நிலையில் நாங்கள் அனைத்து போட்டிகளையும் வெளியில் சென்று விளையாட வேண்டியதால் நாங்கள மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றோம் என்று கூறினர்.

Categories

Tech |