ஒரத்தநாடு அருகே பெரியார் சிலைக்கு காவி துண்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் யார் இந்த வேலையை செய்தார்கள் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே பெரியார் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலைக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ காவி துண்டு மற்றும் தலையில் தொப்பியை அணிவித்து சென்றுள்ளனர். இதையடுத்து இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் யாரோ ஒருவர் இந்த வேலையை செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது.
ஆனால் இதை அவர்தான் செய்தாரா அல்லது வேறு எனும் மர்மநபர்கள் செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த சிலைக்கு அருகே உள்ள சிசிடிவி கேமரா களையும் ஆய்வு செய்து வருகின்றனர. தேர்தல் நடக்கும் சமயத்தில் பெரியார் சிலைக்கு காவி துண்டு போற்றியது, திராவிட கழகத்தினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் கலவரம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.