மூளைக்காய்ச்சல் வருவது போன்ற அறிகுறி தென்பட்டால் அலட்சியம் காட்டாதீர்கள். உடனே மருத்துவரை அணுகுங்கள்.
மூளைகாய்ச்சல் மூளை, முதுகு எலும்பை பாதிக்கக்கூடிய நோய் ஆகும். முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் உயிரிழப்பும் நேரிடலாம். அல்லது நிரந்தர பக்கவாதத்துக்கு இந்த நோய் வழிவகுக்கும். இந்த நோயானது அதிகமாகும் போது உடலில் பல்வேறு மாற்றங்களை காணலாம். உடல் தடித்துப் போவது, சிறு புள்ளிகள் போன்றவை உருவாகும். இது தீவிரமடையும் போது புள்ளிகளும் பெரிதாகும்.
பாக்டீரியா மூளைகாய்ச்சல் பொறுத்தவகரை அது மிகவும் கடுமையானது. உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வில்லையெனில் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும். இதே வைரஸ் மூளைக் காய்ச்சல் எதிர்ப்பு மருந்துகளை நரம்பில் செலுத்துவதன் மூலம் குணப்படுத்திவிடலாம்.